Sunday, December 12, 2021

பிள்ளையார் நோன்பு 2021


நகரத்தார் நலச்சங்கம்

(உறுதிக் கோட்டை வட்டகை)

70 பந்தய சாலை, கோயம்புத்தூர் 641018

=================

 
சிவமயம் 
10-12-2021 

பிலவ ஆண்டு கார்த்திகை  மாதம் 24 ம் நாள் வெள்ளிக்கிழமை 




கோவை நகரத்தார் நல சங்கம் சார்பில் வள்ளலார் மண்டபத்தில் இன்று மாலை 7 மணி அளவில்  15 ம் ஆண்டு பிள்ளையார் நோன்பு விழா  சிறப்புடன் நடைபெற்றது. நகரத்தார்களும் ஆச்சிமார்களும்  திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நமது  சமூக நன்மைக்காக சங்க அமைப்பை மாற்றி அமைத்து Nagarathar Nala Charitable Foundation   என்ற  அறக்கட்டளையை பதிவு செய்து உள்ளோம். இந்த அறக்கட்டளை வாயிலாக நமது சமூகத்திற்கு நம்மால் ஆன உதவிகளை செய்ய நமது சங்க நிர்வாக குழு முடிவு செய்து உள்ளது.
 

கோவை  நகரத்தார் நல அறக் கட்டளை சார்பாக கீழ்க்கண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன:


1. உறுதிக்கோட்டை வட்டகையில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை வரும் ஜனவரி 2022 லிருந்து மாதந்தோறும் ரூபாய் 500 ஆக உயர்த்தி கொடுக்கப்படும். (தற்பொழுது  ரூபாய் 300 வழங்கப்பட்டு வருகிறது.) 13 வருடங்களாக தொடர்ந்து இந்த உதவி செய்யப்பட்டு வருகிறது. பயன் அடைந்தவர்களின் எண்ணிக்கை 13. இதற்காக நாம் சங்கத்திலிருந்து இது வரை கொடுத்துள்ள  தொகை 2,47,800.


2. ஆதரவற்றவர்களின் இறுதிச்சடங்குக்கு ரூபாய் 3000 உதவித்தொகை வழங்கப்படும்.


3. வரும் கல்வியாண்டில் இருந்து கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் ஒரு  லட்ச ரூபாயுடன் இந்த திட்டத்தை ஆரம்பிக்க தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உறுதி கோட்டை வட்டகை  மாணவ மாணவியர்  யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

 




























 







 
ஏலம் எடுத்த நகரத்தார் அனைவருக்கும் நன்றி🙏







 
கோவை மாவட்ட லட்சிய ஆசிரியர் விருது பெற்ற 
திருமதி தேவி முத்து கணேஷ் 
அவர்களை பாராட்டி மேலும் சிறப்படைய பொன்னாடையை 
திருமதி சிந்து காசி விஸ்வநாதன் அவர்கள் சிறப்பித்து சங்கம் மூலம் வாழ்த்தை அர்ப்பணித்தோம்.


2021 பிள்ளையார் நோன்பு அன்று துவக்கப்பட்டுள்ள 
கல்வி உதவி தொகை திட்டத்திற்கு 
முதன் முதலாக நன்கொடை  
அளித்தவர்களுக்கு சங்கத்தின் சார்பாக நன்றிகளை 
தெரிவித்து கொள்கின்றோம் !


 
 
 
நம் சமூகம் விருத்தி அடைந்து நகரத்தார் அனைவரும் நல் வாழ்வு வாழ எல்லாம் வல்ல மரகத விநாயகர் அருள்புரிவாராக.

நகரத்தார் நலச்சங்கம்

(உறுதிக் கோட்டை வட்டகை)

 

தி.காசி விஸ்வநாதன் செட்டியார் - தலைவர்

நா.முருகப்பன் செட்டியார் - துணைத் தலைவர்

அண.கண்ணன் செட்டியார் - செயலாளர்          

சுப. வெள்ளையப்பன் செட்டியார - பொருளாளர்

மீ. கணேசன் செட்டியார் - துணை பொருளாளர்

நா.அன்புநாதன் செட்டியார் - இணைச் செயலாளர்                

பழ.சேதுராமன் செட்டியார் - துணைச் செயலாளர்

கௌரவ ஆலோசகர்கள் :

மு. இராமநாதன் செட்டியார்

நா. சீதாராமன் செட்டியார்

 கதி.வெள்ளையப்பன் செட்டியார்

 சீ. சோமசுந்தரம் செட்டியார்

சி.திருப்பதி செட்டியார்



No comments:

Post a Comment

பிள்ளையார் நோன்பு 2021

நகரத்தார் நலச்சங்கம் ( உறுதிக் கோட்டை வட்டகை) 70 பந்தய சாலை , கோயம்புத்தூர் 641018 ================= உ   சிவமயம்   10-12-2021  பில...