Friday, December 27, 2019

உறுதிக்கோட்டை வட்டகை - பிரிந்த வரலாறு

  இந்த வரலாற்றினை Wikipedia-வில் பார்க்க: https://w.wiki/CGh

நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பூர்விகம்.

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் ஆதியில் நாக நாடு என்ற பகுதியில் வாழ்ந்து வந்த வைசியர்கள். தொண்டை நாட்டிற்கு வட மேற்கே (தற்போதைய ஆந்திர பிரதேசத்தின் தென்பகுதியில்) இருந்த இந்த நாக நாடு பூகம்பத்தில் அழிந்துவிட்டதாக தெரிகிறது. கேரளத்தின் கடற்கரையோரம் இருந்ததாகவும் சுனாமியில் அழிந்து விட்டதாகவும் ஒரு கருத்து உள்ளது. இங்கிருந்து குடி பெயர்ந்து கீழ்கண்ட பகுதிகளில் வாழ்ந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. [1] [2]
  • காஞ்சிபுரம் (தொண்டை நாடு) - கி.மு. 2897 முதல் சுமார் 2100 ஆண்டுகள்
  • காவேரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) (சோழ நாடு) - கி.மு. 789 முதல் சுமார் 1400 ஆண்டுகள்
  • ஓங்காரக்குடி (காரைக்குடி) (பாண்டிய நாடு) - கி. பி. 707 முதல். [3]
இந்த தன வைசியர்கள் முதலில் மூன்று பிரிவாக அதாவது
  1. ஆறு வழியார்
  2. ஏழு வழியார்
  3. நான்கு வழியார்
என்றுதான் இருந்துள்ளனர். மூன்று பிரிவினரும் நாக நாட்டில் இருந்த காலத்திலிருந்தே மரகத விநாயகரை வழிபட்டு வந்துள்ளனர். பாண்டிய நாடு வந்த பின்தான் அரியூரார், இளையாற்றங்குடியார், சுந்தரப்பட்டணத்தார் என்று அழைக்கப்பட்டனர்.
இளையாற்றங்குடியார் மட்டுமே பின்னர் நாட்டுக்கோட்டை நகரத்தார் என்று அழைக்கப்பட்டனர். அரியூர் நகரத்தார் வடக்கு வளவுதெற்கு வளவு மற்றும் நாகர்கோயில் ஏழூர் செட்டி சமூகம் என்று மூன்று பிரிவாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அதே போல் சுந்தரப்பட்டணத்தார் பல்வேறு காரணங்களால் கேரளத்தில் உள்ள கொல்லம் அருகே குடி பெயர்ந்து சென்று விட்டார்கள்.

நகரத்தார் பிரிவினைகள்

கடந்த 1300 வருடங்களில் இது வரை பல பிரிவினைகள் ஏற்பட்டு உள்ளன. அவற்றில் குறிப்பிட்டு சொல்ல கூடியவை:

  1. உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்
  2. முறையூர் நகரத்தார்
  3. பாலய்யபட்டி நகரத்தார்
  4. ஆத்தங்குடி நகரத்தார்
  5. அரியூர் நகரத்தார் - வடக்கு வளவு
  6. அரியூர் நகரத்தார்- தெற்கு வளவு
  7. அரியூர் - ஏழூர் செட்டி சமூகம்
  8. சுந்தரப்பட்டணம் நகரத்தார்

இவற்றில் உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்கள் மட்டுமே பூர்விகமான ஆதாரங்கள் வைத்திருக்கிறார்கள்.[4]

உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்கள்வரலாறு

இந்த சம்பவம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.
நகரத்தார் சம்பந்தமான பிரச்சினைகளை நகரக் கூட்டம் கூட்டி விவாதித்து முடிவு எடுப்பது, பழங்காலம் தொட்டு உள்ள மரபாகும். 12-07-1823 தேதியில் (சித்திரபானு வருடம், ஆனி மாதம் 29-ம் தேதி ) மாத்தூர் அருகே உள்ள உஞ்சனை என்ற ஊரில் 96 ஊர் நகரக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அன்று ஏரியூரை சேர்ந்த காக்கா வெள்ளையன் செட்டியார் என்பவர் கூட்டத்திற்கு தாமதமாக வந்துள்ளார். வந்த வேகத்தில் அவர் வந்த குதிரை வண்டி கிளப்பிய தூசி, கூட்டத்தில் இருந்தவர்கள் மேல் பட்டதால் நகரத்தார்கள் கோபம் கொண்டு கூட்டத்தை பாதியில் நிறுத்தி அவரை முதலில் அபராதம் கட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் அதற்கு பிறகுதான் கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு எடுத்தார்களாம்.[4]
ஆனால் காக்கா வெள்ளையன் செட்டியார் அவர்கள் தன்மீது எந்த தவறும்  இல்லை  என்று அதற்கு கட்டுப்படாமல் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாமல்  கோபத்தில் வெளியேறி உள்ளார்கள். அவரைச் சேர்ந்த பங்காளிகள் சிலரும் கொள்வினை, கொடுப்பினை செய்தவர்களில் சிலரும் சேர்ந்து ஆக மொத்தம் 104 புள்ளிகள்  மட்டும் அவருடன் பிரிந்து சென்றுள்ளார்கள். இவ்வாறு நகர கூட்டத்தை மதிக்காமல் வெளியேறியவர்கள் மீது நகர முறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. கி.பி.1823-ல் பிரிந்ததிலிருந்து இவர்கள் திருமணங்களுக்கு நகரக் கோவில்களிலிருந்து மாலை அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது.[5]
ஒன்பது நகரகோவில்களில் நான்கு கோவில்களை (மாத்தூர், வயிரவன் கோவில், பிள்ளையார்பட்டி, இளையாற்றங்குடி) சேர்ந்த நகரத்தார்கள் மட்டுமே இந்த 104 புள்ளிகளில் இருந்திருக்கிறார்கள்.  இவர்கள் உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார் என்ற தலைப்பில் ஓலைச்சுவடியில் ஒரு முறி எழுதி கட்டி இருக்கிறார்கள். (ஓலைச்சுவடிகளின் படங்களை பார்க்கவும்.) அந்த முறியில் கொள்வினை, கொடுப்பினை, நன்மை, புதுமை, சுகசோபன காரியங்கள் எவ்விதம் செய்து கொள்வதென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிரிந்து வந்த 104 புள்ளிகளும் மேற்படி முறிப்படி உறுதிக்கோட்டை, திட்டுக்கோட்டை, ஆவரங்குடி, கருங்குளம், பனக்கரை, சருகணி, ஏரியூர், சூரக்குடி ஆகிய ஊர்களில் குடியேறி நாளடைவில் இந்த ஊர்களைக் காலிசெய்து தற்சமயம் குமாரவேலூர், சீனமங்கலம், சண்முகநாதபட்டினம், S.சொக்கநாதபுரம், கருங்குளம், ஆவரங்குடி, ஏரியூர், சூரக்குடி, ஒ. புதூர் ஆகிய ஊர்களில் இருந்து வருகிறார்கள்.

ஆதாரங்கள்:

புதுவயல், நாச்சாத்தாள் பங்காளிகள்  படைப்பு:
படைப்பு என்பது பங்காளிகள் சேர்ந்து மூதாதையர்களை நினைத்து சாமி கும்பிடுவதாகும். இந்தப் படைப்பை வயிரவன் கோவிலைச் சேர்ந்த நகரத்தார்கள் ஒவ்வொரு வருடமும் புதுவயலில் நடத்திவருகிறார்கள். கி.பி.1823-லிருந்து உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்கள் பிரிந்து வாழ்ந்தாலும் மேற்படி நாச்சாத்தாள் படைப்புக்கு நேரில் சென்று, இப்போதும் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்கள்.

இதற்கு ஆதாரமாக புதுவயலில் இருந்து உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தாரை சேர்ந்த வயிரவன் கோவில் புள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வந்துகொண்டு இருக்கிற அழைப்புகளில் உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தாரை “நமது பங்காளிகள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.[5]

குன்றக்குடி அன்னதான மடம்:

குன்றக்குடி அன்னதான மடத்தில் ஒவ்வொரு வருடமும் நகரத்தார்களால் புள்ளி ஒன்றுக்கு விகிதாசாரப்படி வரி வசூல் செய்து கொடுத்து , மஹேஸ்வர பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பூஜைக்கு உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்களுக்கும் வருடாவருடம் அழைப்பு வந்து புள்ளி ஒன்றுக்கு விகிதாச்சாரப்படி வரி வசூல் செய்து கொடுத்து இன்றுவரை தொடர்ந்து மேற்படி மகேஸ்வர பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.[6]

உபதேசம் பெறுதல்:

நகரத்தார்கள் சாதிமுறை நியாயப்படி ஆண்கள் பாதரக்குடி மடத்திலும், பெண்கள் துலாவூர் மடத்திலும் உபதேசம் கேட்டுக்கொள்ளவேண்டும். அவ்வண்ணமே உறுதிக்கோட்டைவட்டகை நகரத்தார்களும் பெண்கள் துலாவூர் மடாதிபதியிடமும், ஆண்கள் பாதரக்குடி சுவாமி அவர்களிடமும் உபதேசம் பெற்று வருகிறார்கள். இதற்கு ஆதாரமாக 26.09.1976-ல் துலாவூர் மடாதிபதி அவர்கள்,  வேந்தன்பட்டி 'தாலாட்டு கவிஞர்' திரு.T. குமரப்பன் செட்டியார் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார் பெண்களுக்கு துலாவூர் மடாதிபதியும், ஆண்களுக்கு பாதரக்குடி சாமியார் அவர்களும் தீட்சை நடத்தி வந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.[7]

நகரத்தார் சடங்குகள் & பழக்க வழக்கங்கள்:

உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்களுக்கு கோவிலும், கோவில் பிரிவுகளும் உண்டு. புதுமை, கார்த்திகைச்சூப்படி, திருவாதிரை, மகர்நோன்பு, பிள்ளையார் நோன்பு, திருமணம் முதலிய சடங்குகளை மற்ற நகரத்தார்களைப் போலவே உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்களும் இப்போதும் தொடர்ந்து செய்து வருகிறார்கள் .[8] [9]

உசாத்துணைகள்: (ஆதாரங்கள் )

  1.   அபிதான சிந்தாமணி. New Delhi: Asian Educational Services: ஆ. சிங்காரவேலு முதலியார். 1910.
  2.  CASTES AND TRIBES OF SOUTHERN INDIA, Edgar Thurston. 1855-1935.
  3.  உறுதிக்கோட்டை வட்டகை வரலாறு. மதுரை: இராம.சு. முத்தையா, மதுரை நகரத்தார் சங்கம்.
  4.  செட்டிநாடும் செந்தமிழும். சென்னை: சோமலெ, வானதி பதிப்பகம். 1984. பக். 540.
  5. ↑ இங்கு மேலே தாவவும்:5.0 5.1 நகரத்தார்களின் பகுத்தாய்ந்த வரலாறு. சிவகாசி: பட்டுவேட்டி ரெ. ராமநாதன் செட்டியார், சூர்யா பிரிண்ட் சொலூஷன்ஸ். 2015. பக். 142-197.
  6.  நகரத்தார்களின் பகுத்தாய்ந்த வரலாறு. சிவகாசி: பட்டுவேட்டி ரெ. ராமநாதன் செட்டியார், சூர்யா பிரிண்ட் சொலூஷன்ஸ். 2015. பக். 161.
  7.  வெ. நா. தியாகராஜன், செட்டியார் (1989). உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார் - நாட்டுக்கோட்டை நகரத்தார்களே ! ஆதாரங்கள் கையேடு. கோயம்பத்தூர். பக். 5.
  8.  நகரத்தார் மலர். 15.11.88. பக். 19.
  9.  செட்டிநாடும் செந்தமிழும். சென்னை: சோமலெ, வானதி பதிப்பகம். 1984. பக். 11.

Sunday, December 22, 2019

URUTHIKOTTAI VATTAGAI - A Break Away Community


To read this history in Wikipedia please CLICK HERE.





Origins Of Nattukottai Nagarathar

Nattukottai Nagarathars are Vaishyas (Vyshya) originally from Naganadu. This ancient land Naganadu is believed to be destroyed (either in an earthquake or floods) and this place was either North or North West of Kanchipuram. It is believed to be to the South of present-day Andhra Pradesh. [7]
Nagarathars migrated and lived in the following places:
·        Kanchipuram (Thondai Nadu) - From 2897 BC for about 2100 years
·        Kaveripoompatinam (Poompuhar) (Chola Kingdom) - From 789 BC for about 1400 years.
·        Ongarakudi (Karaikudi) (Pandiya Kingdom) - From 707 AD onwards.
When they were in Naganadu these Dhana Vaishyas had three different divisions:
1.   Aaru (Six) Vazhiyar
2.   Ezhu (Seven) Vazhiyar
3.   Nangu (Four) Vazhiyar
All these three divisions were devoted to Emerald Ganesha (மரகத விநாயகர்). Only after they migrated to the Pandya_Kingdom they were called as Ariyurar, Ilayatrangudiyar, and Sundrapattanathar.
Nagarathars of Ilayatrangudiyar were later called as Nattukottai Nagarathar. Ariyurar Nagarathars further split into 3 divisions: Vadakku Valavu, Therku Valavu and Elur Chetty (Nagercoil). Sundrapattanathar Nagarathars migrated to Kollam district in Kerala and their history is completely lost now since there was no record keeping.[8]

Divisions

Multiple break-away communities exist among Nagarathars. The notable ones happened over a period of past 1300 years are mentioned here:
  1. Uruthikottai Vattagai Nagarathars
  2. Murayur Nagarathars
  3. Palayapatti Nagarathars
  4. Athangudi Nagarathars
  5. Ariyurar – Vadakku Valavu
  6. Ariyurar – Therkku Valavu
  7. Ariyurar – Elur Chetty
  8. Sundarapattanathar Nagarathar
Among all these divisions only Uruthikottai Vattagai Nagarathars have proper evidences and record keeping.

HISTORY OF URUTHIKOTTAI VATTAGAI NAGARATHAR



Manuscript inscribed by Uruthikottai Nagarathar - the first page

This incident took place on 12-July-1823 circa 200 years ago. It was the customary practice of Nagarathars in the olden days to congregate in a certain pre-arranged place to discuss any matter concerning the Nagarathar community. On 12-July-1823 (that is Tamil year Subhanu (சுபானு), Aani (ஆனி) month, 29th day), one such assembly was convened by Nagarathars of 96 villages at Unjanai, a small village near Devakottai in between Mathur and Iluppakudi. For that assembly, one prominent Chettiar Eriyur Kakkai Vellayan Chetty came late. He galloped into the assembly on horseback in haste, created a maelstrom of dust that swirled and engulfed the patiently waiting Nagarathars. He was unapologetic. The Assembly was outraged at his disrespect, lack of decorum and lateness. A fine was imposed and an apology was demanded prior to commencing.[13]
But he arrogantly refused to accept the directive. Instead, he used his considerable power and position to influence his reluctant relatives and close family into breaking away from the main Nagarathar community.
Ever since this incident in 1823 and subsequent fallout, this breakaway group was deemed segregated and privileges of belonging to the greater Nagarathar community revoked. One of the punitive measures meted out was the cessation of the custom of officially registering the marriages in the respective temples. The issuing of garlands from these temples in blessing and recognition of the newly married couples as a family unit (“pulli”) was also halted. The most severe punitive measure was the non-acknowledgement of the very existence of this segregated minority of Nagarathars in the official count of units (‘pullis”) of the temples.[14]
This minority group came to be known as Uruthikottai Vattagai Nagarathars. Among the 8 villages they settled down initially Uruthikottai was a prominent place in Sivagangai District those days.[15] They wrote their own rules and regulations and the same has been imprinted in dry palm-leaf as practised in those days. These palm-leafs are safeguarded to date. (Please refer to the images of these palm-leafs).
Manuscripts - Full View

As mentioned in this palm-leaf, initially they settled in the following villages: Uruthikottai, Thittukottai, Avarangudi, Karungulam, Panakkarai, Sarugani (Sarakanei), Eriyur and Surakudi. Over the period they vacated some of these villages and finally settled in the following 9 villages:[16]

  1. Avarangudi
  2. Eriyur
  3. Karungulam
  4. Kumaravelur
  5. O. Pudur (Okkur Pudur)
  6. Seenamangalam
  7. Shanmuganathapatnam 
  8. S. Sockanathapuram 
  9. Surakudi
Out of 9 Nagarathar temples, this break-away Nagarathars group of 104 families belong to only four Nagarathar temples, namely Ilayathangudi, Mathur, Vairavanpatti and Pillayarpatti. Today the total number of families has grown from 104 to nearly 1400. Marriage alliances happen within Uruthikottai Vattagai Nagarathars only and marrying outside the community (Vattagai) is banned.

Evidences

Pudhuvayal Nachathal Padaippu

Padaippu is undertaken by relatives (Pangali பங்காளிகள்) of the same bloodline. This function is an offering and prayers to the ancestors. This is convened periodically on a predetermined date mostly at the native village or temple.
Nachathal Padaippu belonging to Vairavan temple is done at Puduvayal village every year during the Tamil month Maasi (மாசி). Though some Nagarathars of Vairavan Temple broke away from the mainstream in 1823 they still participate in this important function. The official invitation (Please refer to the invitation image) received by Vairavan Kovil Nagarathars of Uruthikottai Vattagai each year is strong evidence.[16]



Invitation to Uruthikottai Vattagai Nagarathar


Nagarathar Sermon

As customary in Nagararathar community males get their sermon in Padharakudi Monastery (மடம்) and females get theirs in Thulavur. The same is followed by Uruthikottai Vattagai Nagarathars till this date. Please refer to the letter written by the head of Thulavur Madam to Mr T. Kumarappa.[8]


Letter from Thulavur Madam

Kundrakudi Charity

Annual food charity function (அன்னதானம்) is conducted at Kundrakudi Temple by collecting tax (Pulli Vari) from all Nattukottai Nagarathars. Similarly, such tax demands are sent to all Uruthikottai Vattagai Nagarathars also. Maheswara Pooja is done at this time and several Nagarathars including from Uruthikottai Vattagai participate in this function.[16]

Disciplinary Action

About 90 years ago one Kaluvathan Chetty of Kumaravelur (Uruthikottai Vattagai) was demanded to appear in person and pay a fine by Nattukkottai Nagarathars at Kovilur Nagarathar assembly for committing a social offence. He admitted his offence and obeyed and eventually he paid the penalty of Rs.650/-[13]

Nagarathar Rituals, Customs, and Traditions

These minority Nattukkottai Nagarathars retained their traditional values and customs in original form as aborigines of the Nattukkottai Nagarathar community. Not one iota of difference can be traced in the rituals, customs and traditions between the mainstream and this Uruthikottai Vattagai Nagarathars except of course some minor changes as per local convenience and preferences. But these small changes are prevalent even among the mainstream Nagarathars from one Vattagai to another.[17] [18]
These break-away group also observe typical Nagarathar functions like Pudhumai (புதுமை) Kaarthigaisupadi (கார்திகைச்சூப்படி), Thiruvadhirai (திருவாதிரை), Magar Nonbu (மகர்நோன்பு) and of course Pillayar Nonbu (பிள்ளையார் நோன்பு).

References


  1.  Singaravelu, Mudhaliar (1899). Abimana Chinthamani. New Delhi: Asian Educational Services.
  2. Jump up t  Pattu Veshti Ramanathan, Chettiar (2015). Analytical History of Nagarathar(நகரத்தார்களின் பகுத்தாய்ந்த வரலாறு). Sivakasi: Surya Print Solutions.
  3.  MR M KR M, Somasundaram (2003). Naam Nammai Sera. Karaikudi: Meyyappan Offset Printers. pp. 7–9.
  4. RM. S. Muthiah, Madurai Nagarathar, Sangam. History of Uruthikottai Vattagai (உறுதிக்கோட்டை வட்டகை வரலாறு). Madurai.
  5.  Thiagarajan, V.N. (1989). Uruthikottai Vattagai Nagarathar (உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார் - நாட்டுக்கோட்டை நகரத்தார்களே ! ஆதாரங்கள் கையேடு.). Coimbatore. p. 4.
  6. Nagarathar Malar (நகரத்தார் மலர்). 15 November 1988. p. 19.
  7. Somalay (1984). Chettinadum Senthamizhum (செட்டிநாடும் செந்தமிழும்). Madras: Vaanathi Publisher. p. 11.

To read this history in Wikipedia please CLICK HERE.

பிள்ளையார் நோன்பு 2021

நகரத்தார் நலச்சங்கம் ( உறுதிக் கோட்டை வட்டகை) 70 பந்தய சாலை , கோயம்புத்தூர் 641018 ================= உ   சிவமயம்   10-12-2021  பில...